/

இருதய பரிசோதனை முகாம்

பண்ருட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாம், காந்தி சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

பண்ருட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாம், காந்தி சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.சண்முகம் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார். சாரதா வித்யாலயா பள்ளித் தாளாளர் எம்.நடராஜன், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கப் பொருளாளர் டி.எஸ்.பாலமுருகன் வரவேற்றார். 
 முகாமில் சுமார் 350 பேருக்கு இருதய பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் சுமார் 40-பேர் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இருதய நல மருத்துவர் பத்ரிநாத் தலைமையிலான குழுவினர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். 
முகாமுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டி.கே.ஏ.கார்த்திக் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.