அம்மா அரங்கம் திறப்பு
நெய்வேலி நகரியம், வட்டம் 17-இல் உள்ள என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கக் கட்டட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா அரங்கம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.


நெய்வேலி நகரியம், வட்டம் 17-இல் உள்ள என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கக் கட்டட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா அரங்கம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவர் பி.அபு தலைமை வகித்தார். செயலர் ராம.உதயகுமார், பொருளாளர் யூ.தேவானந்தன், அலுவலகச் செயலர் பி.அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக நகரச் செயலர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட வழக்குரைஞர் அணி துணைச் செயலர் ரா.ராஜசேகர், என்எல்சி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ரா.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி அம்மா அரங்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அதிமுக நிர்வாகிகள் எஸ்.கே.ராஜா, பாலசுப்ரமணியன், கஞ்சமலை, ராமலிங்கம், கணேசன், தமிழ்ச்செல்வன், பன்னீர்செல்வம், ஜோசப், தனவேல், கோவிந்தராஜ், முன்னாள் நகரச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட 11 என்எல்சி தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ரா.ராஜேந்திரன் வழங்கினார். அதிமுக அவைத் தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...