கடலூர் மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க திமுகவினர் நிலவேம்புக் குடிநீர்வழங்க வேண்டுமென கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம், இலவச மருத்துவ முகாம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார். மருத்துவரணி மாநில அமைப்பாளர் ஜெ.அருண், மாவட்ட அமைப்பாளர் பி.கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, கடந்த 30-ஆம் தேதி திமுக மருத்துவர் அணியும், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து குறிஞ்சிப்பாடியில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. இதில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, காய்ச்சல், குடல்நோய் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவரணி துணை அமைப்பாளர்களும், மருத்துவர்களுமான சிவ.செந்தில், ஆர்.கிருஷ்ணராஜ், ஜி.கார்த்திகேயன், ஆர்.வசந்த், எம்.ஆனந்த், ஆர்.பாலமுருகன் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர்.இந்த நிகழ்வுகளில் கட்சியின் ஒன்றியச் செயலர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பி.பாலமுருகன், நிர்வாகிகள் செங்கல்வராயன், ராமர், சங்கர், விடுதலைசேகர், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டயபுரம் பகுதியில் காலூன்ற முயலும் பட்டாசு ஆலைகள்! அச்சத்தில் கிராம மக்கள்

காரைக்குறிச்சியில் கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு

ஒசூா் அருகே பட்டியலின மக்களின் பொதுப் பாதையை மறித்து முள்வேலி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மனவளக் கலை பயிற்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


