ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மங்கலம்பேட்டையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்: தமுமுக

மங்கலம்பேட்டையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என தமுமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :5 நவம்பர் 2018, 8:58 am IST

மங்கலம்பேட்டையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என தமுமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அண்மையில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: மங்கலம்பேட்டை சுமைதாங்கி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தேநீர் விடுதிகளில் இரவு நேரங்களில் தொலைதூரத்திலிருந்து வரும் பேருந்துகள், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களில் வருகின்றவர்கள் இங்குள்ள சாலை ஓரங்களிலும், குடியிருப்பு பகுதிகளின் அருகாமையிலும் மலம் மற்றும் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், இந்தப் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு நோய் உபாதைகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தேவையான பொதுக் கழிப்பிடங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
 பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாய், பன்றிகள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக, பில்லூர் சாலைப் பகுதியில் உள்ள குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டியிருக்கும் இடங்களில் நாய், பன்றிகள் உலவுகின்றன. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.