பண்ருட்டி வட்டம், இடையர்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசனம், வாஸ்து பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதபாராயணம் ஆகியவை தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜையும், 9 மணி அளவில் கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்யப்பட்டது. இரவில் உற்சவர் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.