மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
By DIN | Published On : 11th April 2019 08:42 AM | Last Updated : 11th April 2019 08:42 AM | அ+அ அ- |

காவலர்கள், அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
காவல் துறையில் பணியாற்றுவோர், அமைச்சு பணியாளர்கள் ஆகியோரது குடும்பத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் உயர் கல்விக்காக ஆண்டுதோறும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 7,500, ரூ. 5,500, ரூ. 3,500, 4 முதல் 10 இடம் வரை ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
இதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வானவர்களுக்கு முதல் இடம் பெறும் மாணவருக்கு ரூ. 6,500, இரண்டு, மூன்றாம் இடத்துக்கு ரூ. 4,500, நான்காம் இடத்துக்கு ரூ. 2,500, 5 முதல் 10 இடம் வரை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2017 - 18 ஆம் ஆண்டுக்கான கல்வி ஊக்கத் தொகை, பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 10 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 10 மாணவர்களுக்கும் என மொத்தம் 20 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் வழங்கினார்.