வாக்குக்கு பணம்: ஒருவர் மீது வழக்கு
By DIN | Published On : 17th April 2019 06:40 AM | Last Updated : 17th April 2019 06:40 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிதம்பரம் நகரில் 22-ஆவது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெறுவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான விசுமகாஜனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் கூடுதல் பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது அண்ணா தெருவில், கொத்தங்குடி தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (48) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.11,070 பணம், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பகுதியில் அதிமுகவுக்கு சாதகமாக வாக்களிக்க பணம் விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூடுதல் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், வாக்காளர் பட்டியல் கொண்ட பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சம்பவம் குறித்து நகர காவல் நிலைய ஆய்வாளர் சி.முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...