குடிநீர் பிரச்னையை தெரிவிக்க தொடர்பு எண்கள்: ஆட்சியர் வெளியிட்டார்

குடிநீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக ஊராட்சி ஒன்றியம்

குடிநீர் பற்றாக்குறை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக ஊராட்சி ஒன்றியம், நகரம் வாரியாக தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டார். 
தற்போது கோடைக்காலம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வரும் நாள்களில் இந்தப் பிரச்னையை உடனடியாக தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுகாதாரமான குடிநீர் தேவையான அளவு வழங்கப்பட்டு வருகிறது. கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில்கொண்டு பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் அலுவலரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 
அதன்படி, மாவட்ட அளவிலான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தை 94425 03801 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் கடலூர்- 94425 03802, அண்ணாகிராமம்-94425 03803, பண்ருட்டி- 94425 03804, குறிஞ்சிப்பாடி- 94425 03805, காட்டுமன்னார்கோவில்- 94425 03806, குமராட்சி- 94425 03807, கீரப்பாளையம்- 94425 03808, மேல்புவனகிரி- 94425 03809, பரங்கிப்பேட்டை- 94425 03810, கம்மாபுரம்- 94425 03811, விருத்தாசலம்- 94425 03812, நல்லூர்- 94425 03813, மங்களூர்- 94425 03814 ஆகிய  எண்களில் தொடர்புகொள்ள வேண்டும். 
நகராட்சிகள் அளவில் கடலூர்- 944250 3831, பண்ருட்டி- 94425 03832, நெல்லிக்குப்பம்- 94425 03833, சிதம்பரம்- 94425 03834, விருத்தாசலம்- 94425 03835 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
பேரூராட்சிகள் அளவில் அண்ணாமலைநகர்- 94425 03815, புவனகிரி- 94425 03816, கங்கைகொண்டான்- 94425 03817, காட்டுமன்னார்கோவில்- 94425 03818, கிள்ளை- 94425 03819, குறிஞ்சிப்பாடி- 94425 03820, லால்பேட்டை- 94425 03821, மங்களம்பேட்டை-94425 03822, மேல்பட்டாம்பாக்கம்- 94425 03823, பரங்கிப்பேட்டை- 94425 03824, பெண்ணாடம்- 94425 03825, சேத்தியாதோப்பு- 94425 03826, ஸ்ரீமுஷ்ணம்- 94425 03827, தொரப்பாடி-94425 03828, திட்டக்குடி- 94425 03829, வடலூர்- 94425 03830 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 
மேலும்,  மாவட்ட அளவில் குடிநீர் விநியோகத்தை கண்காணித்திட  அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கண்காணிப்பு அறையை 1800 425 1941 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com