மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
By DIN | Published On : 26th April 2019 06:39 AM | Last Updated : 26th April 2019 06:39 AM | அ+அ அ- |

மணல் கடத்தல் தொடர்பாக 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், ராஜாராம் ஆகியோர் வியாழக்கிழமை தனித் தனியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெவ்வேறு இடங்களில் மாட்டு வண்டிகளில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றதாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.