மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
By DIN | Published On : 26th April 2019 06:39 AM | Last Updated : 26th April 2019 06:39 AM | அ+அ அ- |

மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
ராமநத்தம் அருகே உள்ள வெங்கனூரைச் சேர்ந்த கருத்தமணி மகன் ராஜேந்திரன் (31). கூலித் தொழிலாளி. இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறி பனங்காய் வெட்டியுள்ளார். அப்போது, மரத்திலிருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயமுற்றார். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.