வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு கடலூரில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி தனது பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 8,904 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தற்போது கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மே 3-ஆம் தேதியும், முதல்நிலைத் தேர்வு ஜுன் மாதமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் அறிவித்துள்ளது. கடலூர் வில்வநகரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அலுவலக கட்டடத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பயிற்சி மையத்தை அணுகி இலவசமாக பயிற்சி பெறலாம். மேலும், விண்ணப்பிக்காதவர்கள் https://www.
sbi.co.in/careers என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுகுமாரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.