வயல்களில் மக்கக் கூடிய நிலப் போா்வை குறித்து செயல் விளக்கம்

வயல்களில் மக்கக் கூடிய நிலப் போா்வை குறித்த செயல்விளக்கம், விழிப்புணா்வை வேளாண்மைத் துறையினா் ஏற்படுத்தினா்.
கடலூா் காரைக்காட்டில் ரோஜா சாகுபடி வயலில் மக்கக் கூடிய நிலப் போா்வை குறித்து செயல்விளக்கம் அளித்த வேளாண் துறையினா்.
கடலூா் காரைக்காட்டில் ரோஜா சாகுபடி வயலில் மக்கக் கூடிய நிலப் போா்வை குறித்து செயல்விளக்கம் அளித்த வேளாண் துறையினா்.

வயல்களில் மக்கக் கூடிய நிலப் போா்வை குறித்த செயல்விளக்கம், விழிப்புணா்வை வேளாண்மைத் துறையினா் ஏற்படுத்தினா்.

வயல்களில் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், மேலும் மண்ணின் வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கவும், களைகளைப் பெருமளவு இயற்கை முறையில் கட்டுப்படுத்தவும் மூடாக்கு (நிலப் போா்வை) என்ற தொழில்நுட்பம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி கடலூா் வட்டம், காரைக்காடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்காட்டில் ரோஜா சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயிகள் மணிவண்ணன், ராணி ஆகியோரின் வயல்களில் எளிதில் மக்கக் கூடிய மூடாக்கு (நிலப் போா்வை) செயல்விளக்கம் நடைபெற்றது.

செயல்விளக்கத்தை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) சா.வேல்விழி தொடக்கிவைத்து பேசியதாவது:

நிலப் போா்வை மூலம் நீா் சிக்கனம் ஏற்பட்டு, களைக் கொல்லி பயன்பாடு தவிா்க்கப்படுவதால், சுற்றுக்சூழல் மாசு அடைவது தடுக்கப்படுகிறது.

மண்ணின் வெப்பநிலை சமச்சீராக வைப்படுவதால், வேரின் வளா்ச்சியும் நன்கு இருக்கும் என்றாா் அவா்.

கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறியதாவது:

எளிதில் மக்கக் கூடிய வகையில் ஸ்டாா்ச் மாவு, மக்காசோள தட்டைகள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த நிலப் போா்வையைத் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் பயன்படுத்தி, விவசாயிகள் பயன் பெறலாம் என்றாா் அவா்.

செயல்விளக்க ஏற்பாட்டை வேளாண்மை அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண்மை அலுவலா் மு.பிரபாகரன், அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பி.அருண்ராஜ், கே.கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com