சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, மகாபிஷேகம், சிறப்பு அர்த்தசாம பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், பிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.