எனதிரிமங்கலத்தில் வீதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர்!
By DIN | Published On : 04th January 2019 08:51 AM | Last Updated : 04th January 2019 08:51 AM | அ+அ அ- |

எனதிரிமங்கலம் கிராமத்தில் உரிய கால்வாய் வசதி இல்லாததால் வீதியில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்டது எனதிரிமங்கலம் கிராமம். இங்குள்ள அக்ரஹாரத் தெருவில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சாலை, கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், அக்ரஹார தெருவில் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்துத் தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி நிர்வாகம் கொசுமருந்து கூட தெளிப்பதில்லை என்றனர்.