குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க "கட்செவி அஞ்சல்' எண்
By DIN | Published On : 04th January 2019 08:49 AM | Last Updated : 04th January 2019 08:49 AM | அ+அ அ- |

குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி ப.சரவணன் தெரிவித்ததாவது: தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்களை புகைப்படமாகவோ, விடியோவாகவோ பதிவு செய்யும் பொதுமக்கள் அதை 90873 00100 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என எஸ்பி கூறினார்.