சுடச்சுட

  

  கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கோயிலில் ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் வேள்வி நடைபெற்றது.
   உலக நன்மை, மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி இந்த வேள்வி நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழ்ச் சங்கத் தலைவர் இராம.முத்துக்குமரனார் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்களை வழங்கினார் (படம்). தொடர்ந்து கோயிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
   நிகழ்ச்சியில், ஆலய சேவா சங்க அமைப்பாளர் எல்.ராஜாராமன், கோயில் சிவாச்சாரியார் எஸ்.கே.கலியமூர்த்தி மற்றும் கிராம 
  மக்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai