வடலூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 04th January 2019 08:46 AM | Last Updated : 04th January 2019 08:46 AM | அ+அ அ- |

வடலூர் பேருந்து நிலையத்தில் தரைக் கடை ஆக்கிரமிப்புகளை போலீஸார் வியாழக்கிழமை அகற்றினர்.
வடலூரில் நான்கு முனைச் சந்திப்பு அருகே வள்ளலார் பேருந்து நிலையம் உள்ளது.
இங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களாலும், ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தரைக் கடைகளாலும் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த டிச.21-ஆம் தேதி செய்தி வெளியானது.
இந்த நிலையில், வள்ளலார் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. பேருந்து நிலைய வளாகத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனங்கள் வெளியேற்றப்பட்டன.
காவல் துறையின் அறிவுறுத்தலையும் மீறி பேருந்து நிலையத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் வள்ளலார் பேருந்து நிலையம் விசாலமாகக் காணப்பட்டது.