திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:48 AM | Last Updated : 04th January 2019 08:48 AM | அ+அ அ- |

திமுக சார்பில் பண்ருட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் காடாம்புலியூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கடலூர் மக்களவை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் அப்பாவு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். நமது வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, பலராமன், வடக்கு ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், லட்சுமி நாராயணன், ஊராட்சி செயலர் அறிவழகன், ஒன்றிய துணைச் செயலர்கள் சுமதி நந்தகோபால், ஏழுமலை, செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...