சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு தங்க வில்வ மாலை: பக்தர் வழங்கினார்
By DIN | Published On : 03rd July 2019 08:55 AM | Last Updated : 03rd July 2019 08:55 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்தில் தங்க வில்வ மாலையை காணிக்கையாக செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்று வரும் நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் 2 அடி உயரமுள்ள தங்க வில்வ மாலையை கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார்.
இந்த மாலையை கோயில் டிரஸ்டி பாஸ்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் நடராஜர் சன்னிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தபின் சிதம்பர ரகசியத்தில் அணிவித்தனர்.
இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.