மாணவர்களுக்கு மடிக் கணினி விநியோகம்
By DIN | Published On : 03rd July 2019 08:48 AM | Last Updated : 03rd July 2019 08:48 AM | அ+அ அ- |

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். ஆசிரியர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் பெ.கலைமணி வரவேற்றார். திட்டக்குடி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.நீதிமன்னன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 2019-20-ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 204 பேருக்கும், 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் 139 பேருக்கும் என மொத்தம் 343 பேருக்கு மடிக் கணினிகளை வழங்கினார்.ஆசிரியர் செ.புஷ்பவள்ளி நன்றி கூறினார்.