கடலூர்
நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
மாவட்ட சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை சார்-ஆட்சியரிடம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
