மின்னல் பாய்ந்ததில் பெண் மரணம்
By DIN | Published On : 14th June 2019 07:33 AM | Last Updated : 14th June 2019 07:33 AM | அ+அ அ- |

தையல்குணாம்பட்டினத்தில் மின்னல் பாய்ந்ததில் பெண் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தையல்குணாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன் (53).
இவர், வியாழக்கிழமை மாலை தனது நிலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கனகு மனைவி வீரம்மாள் (55) , ஆறுமுகம் மனைவி சித்ரா (21) ஆகியோருடன் எள் உலர்த்தும் பணியில் ஈடுபட்டார். மாலை 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் தார்பாய் மூலம் எள் குவியலை மூடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மின்னல் பாய்ந்ததில் வீரம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சடகோபன், சித்ரா ஆகியோர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு இருவரும் கடலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.