கடலில் விடப்பட்ட 223 ஆமைக் குஞ்சுகள்
By DIN | Published On : 22nd March 2019 09:24 AM | Last Updated : 22nd March 2019 09:24 AM | அ+அ அ- |

கடலூரில் 223 ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை கடலில் விடப்பட்டன.
கடலூர் மாவட்டம் சுமார் 49 கி.மீ. தொலைவு கடற்கரையைக் கொண்டது. பல்வேறு காலக் கட்டங்களில் கடலில் இருந்து ஆமைகள் கடற்கரைக்கு வந்திருந்து முட்டைகளை இட்டுச் செல்லும்.
இந்த முட்டைகளை மனிதர்கள் சிலரும், விலங்குகளும் வேட்டையாடுவதால் ஆமைகளின் இனப் பெருக்கம் பாதிக்கப்படுகிறது. எனவே, வனத் துறையினர் கடற்கரை பகுதிகளில் இருந்து ஆமை முட்டைகளை சேகரித்து அதனை பொறிப்பகங்களில் வைத்திருந்து குஞ்சு பொறித்ததும் கடலில் விட்டு வருகின்றனர்.
இவ்வாறு பொறிக்கப்பட்ட 223 ஆமைக் குஞ்சுகளை வன நாளை முன்னிட்டு கடலில் விடும் நிகழ்ச்சி கடலூர் அருகே உள்ள சொத்திக்குப்பம் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இ.ராஜேந்திரன், கோட்ட வன அலுவலர் அப்துல்ஹமீது, வனவர் சதீஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...