திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 22nd March 2019 09:19 AM | Last Updated : 22nd March 2019 09:19 AM | அ+அ அ- |

நெய்வேலியில் திமுக கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொமுச அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்து, கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.
ஸ்ரீரமேஷை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். கூட்டத்தில், கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது. வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது. மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிக்குழு அமைப்பது. வாக்குச் சாவடி முகவர்களை உள்ளடக்கி பணியாற்றுவது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பணியாற்றுவது. காவல் துறையில் அனுமதி பெற்று ஊராட்சிப் பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்வது ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...