அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 28th March 2019 08:58 AM | Last Updated : 28th March 2019 08:58 AM | அ+அ அ- |

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை மு.ஹேமலதா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை வ.எழிலரசி வரவேற்றார். சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் எஸ்.ஸ்ரீராமன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் த.ஜெயராமன், முன்னாள் தலைமை ஆசிரியர் ப.ராஜசேகரன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெ.ரவிச்சந்திரன் செய்திருந்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க செயலர் கே.பாண்டியன் நன்றி கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...