மாதிரி வாக்குச்சாவடி மையம்
By DIN | Published On : 28th March 2019 09:23 AM | Last Updated : 28th March 2019 09:23 AM | அ+அ அ- |

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் திறக்கப்பட்டு, புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தல் 2019-க்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏப். 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், துணை ஆட்சியருமான (ஆதிதிராவிடர் நலம்) ராஜஸ்ரீ திறந்து வைத்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் இயந்திரத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
நிகழ்வின் போது, பண்ருட்டி வட்டாட்சியர் கீதா, துணை வட்டாட்சியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனபதி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார், பண்ருட்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...