காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்காக 321 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 326 வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களும் செவ்வாய்கிழமை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராகவன் தலைமையில், வட்டாட்சியர் தமிழ்செல்வன், தேர்தல் நடத்தும் துணை வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர், அனைத்துக் கட்சியினர் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தனி அறையில் பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.