நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
பந்தலூர் வட்டத்திலுள்ள நெல்லியாளம் பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி (54). இவர் திமுகவில் மாவட்ட இலக்கிய பகுத்தறிவு அணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் திராவிடமணி அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு நெல்லிக்காய் ஊறல் கொடுத்து மயக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் பெற்றோர் சேரம்பாடி போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி திராவிடமணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.