ஆறுமுகனார் நூற்றாண்டு விழா கூட்டம்
By DIN | Published On : 19th May 2019 09:48 AM | Last Updated : 19th May 2019 09:48 AM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரர் கூ.ஆறுமுகனாரின் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முன்னாள் எம்பி ஏ.முருகேசன் தலைமை வகித்தார். கே.பி.எஸ்.மணி, கனிவண்ணன், க.திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளர் ஏ.ஆர்.அன்புகாந்தி வரவேற்றார்.
அவர் பேசுகையில், புலவர் கூ.ஆறுமுகனார் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், அவரது சம காலத்தில் வாழ்ந்த சமுதாய தலைவர்களின் உருவப் படங்களை நூற்றாண்டு விழாவில் திறந்து வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் அம்பிகாபதி, ஜோதிமணி, திருப்பனந்தாள் புரட்சிமணி, கவிஞர் நாரண மணிவண்ணன், புலவர் மு.வரதராஜன், பேராசிரியர் தெய்வநாயகம், வெங்கடாஜலம், பெர்னாட்ஷா, செல்லப்பா குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பேராசிரியர் ஆறு.அன்புஅரசன் நன்றி கூறினார்.