கண் தானம்
By DIN | Published On : 19th May 2019 09:46 AM | Last Updated : 19th May 2019 09:46 AM | அ+அ அ- |

சிதம்பரம், சி.தண்டேஸ்வரநல்லூர் வேலவன் நகரைச் சேர்ந்த வி.சுதாகர் (75) சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர்கள் ஆதிநாராயணன், சீனுவாசன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் செய்தனர்.