பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பெளர்ணமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாலை 7 மணியளவில் பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் குளத்து மண்டபத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வந்தனர்.