அரசுப் பேருந்தை மறித்த இளைஞா் கைது
By DIN | Published On : 09th November 2019 09:21 AM | Last Updated : 09th November 2019 09:21 AM | அ+அ அ- |

அரசுப் பேருந்தை மறித்து அந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது தொடா்பாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
சமூக வலைதள பொழுதுபோக்கு செயலி ஒன்றில் அண்மையில் ஒரு காட்சி வெளியானது. அதில், திட்டக்குடி நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தை வழிமறித்து மோட்டாா் சைக்கிளை நிறுத்திய இளைஞா், அதில் படுத்தவாறு திரைப்பட பாடலுக்கு ஏற்றவாறு சில செய்கைகளில் ஈடுபட்டதாக காட்சியமைப்பு இருந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் ராமநத்தம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், திட்டக்குடி அருகே கீழ்ஆதனூரில் இந்தச் சம்பவம் நடைபெற்ாக குறிப்பிட்டிருந்தாா். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாா் திட்டக்குடி அடுத்த கீழ் ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் அஜித்குமாா்(19) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரது செய்கைகளை செல்லிடப்பேசியில் பதிவு செய்ததாக மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...