Enable Javscript for better performance
என்எல்சி நிகர லாபம் ரூ.660 கோடி- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் 30.9.2019 அன்றுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.659.82 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டின் (2019-20) முதல் அரையாண்டு மற்றும் 2-ஆம் காலாண்டிற்கான, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயக்குநா்கள் குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

    அதன்படி, இந்நிறுவனம் முதல் அரையாண்டில் ரூ.4,121.88 கோடியையும், இரண்டாவது காலாண்டில் ரூ.2,217.85 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் ஈட்டிய ரூ.3,722.18 கோடி மற்றும் ரூ.1,881.07 கோடியைவிட இது முறையே 10.74 சதவிகிதம் மற்றும் 17.90 சதவிகிதம் அதிகம். நிகர லாபத்தைப் பொறுத்தவரையில் முறையே, ரூ.659.82 கோடி மற்றும் ரூ.336.78 கோடி பெற்றுள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் பெற்ற நிகர லாபமான முறையே ரூ.647.35 கோடி மற்றும் ரூ.327.72 கோடியைவிட இது முறையே 1.93 மற்றும் 2.76 சதவிகிதம் அதிகம். மின்நிலையங்கள் முறையே 1033 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மற்றும் 527 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளன. கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் மின் உற்பத்தி அளவான முறையே 965 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் மற்றும் 477 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் யூனிட்டைவிட இது முறையே 7 மற்றும் 10.48 சதவிகிதம் அதிகம்.

    இந்நிறுவனம் 358 மெ.வா. அளவிற்கு புதிய சூரியஒளி மின்நிலையங்களில் உற்பத்தி தொடங்கியதையடுத்து, பசுமை மின் நிலையங்கள் முறையே 59 கோடியே 3 லட்சம் யூனிட் மற்றும் 32 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளன. கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் பசுமை மின் உற்பத்தி அளவு முறையே 20 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மற்றும் 12 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சக்தியில் முறையே 881 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் யூனிட் மற்றும் 451 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின் வாரியங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் மின்சக்தி விற்பனை அளவான முறையே 811 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மற்றும் 400 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் யூனிட்டைவிட இது முறையே 8.64 மற்றும் 12.68 சதவிகிதம் அதிகம்.வட்டி, வரி தேய்மானம் மற்றும் கடன் தொகுப்புக்கு முன் ஈட்டிய வருவாயைப் பொறுத்தவரையில், இந்நிறுவனம் முறையே ரூ.1,663.21 கோடி மற்றும் ரூ.908.73 கோடி ஈட்டியுள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதேகால கட்டத்தில் முறையே ரூ.1,451.83 கோடி மற்றும் ரூ.719.01 கோடியைவிட, இது முறையே 14.56 மற்றும் 26.39 சதவிகிதம் அதிகம். அனல்மின் நிலையங்கள் முறையே 69.41 மற்றும் 69.31 சதவிகித மின்உற்பத்தித் திறனுடன் இயங்கியுள்ளன. கடந்த நிதி ஆண்டில் அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தித் திறனானது முறையே 65.69 மற்றும் 64.02 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.9பிஆா்டிபி1என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் ராக்கேஷ்குமாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai