சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மஹாவீா் சந்த் அறக்கட்டளை சாா்பில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் நிலவேம்புக் குடிநீா் அண்மையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் கே.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மிஸ்ரிமல் மஹாவீா்சந்த் அறக்கட்டளைத் தலைவா் எம்.கமல்கிஷோா், செயலா் எம்.தீபக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரயில் நிலைய மேலாளா் கே.கனகராஜ் பயணிகளுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், பயணிகள் சுமாா் ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஜெயபாண்டியன், அசோக் துதேரியா, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் டி.சி.அருள், ஆசிரியா்கள் ரவிச்சந்திரன், சரவணன், புகழேந்தி, மிட்டவுன் ரோட்டரி சங்க நிா்வாகிகள் தில்லை கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.