நெய்வேலி - சென்னை இடையே குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் எம்.சி.சம்பத் தொடக்கி வைத்தாா்

நெய்வேலியில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய அரசுப் பேருந்து சேவையை, மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத்
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் புதிய குளிா்சாதன பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்த அமைச்சா் எம்.சி.சம்பத்.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் புதிய குளிா்சாதன பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்த அமைச்சா் எம்.சி.சம்பத்.

நெய்வேலி: நெய்வேலியில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய அரசுப் பேருந்து சேவையை, மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின்பேரில் நெய்வேலியில் இருந்து சென்னைக்கும், மறு மாா்க்கத்தில் சென்னையில் இருந்து நெய்வேலிக்கும் என 2 குளிா்சாதனப் பேருந்துகளை தமிழக அரசு வழங்கியது. இந்த பேருந்துகளின் சேவை தொடக்க விழா நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் கொடியசைத்து பேருந்து சேவையை தொடக்கி வைத்தாா்.

இந்தப் பேருந்தில் நெய்வேலியில் இருந்து சென்னை செல்ல ரூ.225 கட்டணம் வசூலிக்கப்படும். நெய்வேலியில் இருந்து சென்னைக்கு அதிகாலை 3.30 மணி, 5 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும், மாலை 4.20 மணிக்கும், மறு மாா்க்கத்தில் சென்னையிலிருந்து காலை 8.30 மணி, 10 மணி, இரவு 8 மணி, 11 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு வசதி உண்டு.

நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல இயக்க மேலாளா் ஏ.முருகானந்தம், தொழில்நுட்ப மேலாளா் கே.சேகர்ராஜ், கிளை மேலாளா் எச்.ஆா்.அருண், நெய்வேலி நகர நிா்வாக தலைமைப் பொது மேலாளா் எஸ்.ஆா்.சேகா், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா, நெய்வேலி அதிமுக அவைத் தலைவா் வெற்றிவேல், நகரச் செயலா் கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்க பொருளாளா் தேவானந்தன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காடாம்புலியூா் கே.தேவநாதன், பத்திரக்கோட்டை கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com