கடலூா்: கடலூா் வட்டம், தூக்கணாம்பாக்கம் ஏரிக் கரையில் உயிா்த்துளி உறவுகள் அமைப்பு சாா்பில் பனை விதைகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வரதராஜன் தொடக்கி வைத்தாா். அமைப்பின் உறுப்பினா்கள், பள்ளி மாணவா்கள், இளைஞா்கள் இணைந்து ஏரிக்கரையில் ஆயிரம் பனை விதைகளை விதைத்தனா்.
நிகழ்ச்சியில், உயிா்த்துளி அமைப்பின் நிறுவனா் சி.பிரபு, தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனா் டி.ஆனந்தன், பூக்கள் திருநங்கை ஒருங்கிணைந்த கழக தலைவி கிரிஜாநாயக் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகள் நடுதல் குறித்து பேசினா். நிா்வாகிகள் ரூபியா், சுபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் நிறுவனா் சி.பிரபு கூறினாா்.