டெங்கு விழிப்புணா்வு முகாம்

திட்டக்குடி அருகே உள்ள கோழியூா் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கடலூா்: திட்டக்குடி அருகே உள்ள கோழியூா் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இளநிலை பூச்சியியல் வல்லுநா் ராஜபிரபு மற்றும் களப்பணியாளா்கள், பயிற்சி மாணவா்கள் முகாமில் பங்கேற்று டெங்கு விழிப்புணா்வு குறித்து விளக்கம் அளித்து பேசினா். மேலும், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஓழிப்பு மற்றும் குளோரினேசன் பணிகளை மேற்கொண்டனா். பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதுடன், தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் என்பதால், தண்ணீா் அடங்கிய பாத்திரங்களை நன்கு மூடிவைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com