மதுக்கடை பூட்டை உடைத்து திருட்டு
By DIN | Published On : 06th October 2019 10:35 PM | Last Updated : 06th October 2019 10:35 PM | அ+அ அ- |

திருட்டு நடைபெற்ற மதுக்கடை அருகே விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் பூட்டை உடைத்து திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றறனா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியாா்பேட்டையில் டாஸ்மாா்க் மதுக்கடை உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை இரவு விற்பனையாளா்கள் மணிகண்டன், விஜயரெங்கன் ஆகிய இருவரும் பணியை முடித்த பிறகு, மதுபானம் விற்ற தொகையை எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டுச் சென்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸாா் விரைந்து வந்து கடையை ஆய்வு செய்தனா். இதில் கடையிலிருந்து 52 மதுப் புட்டிகள், ரூ.1,050 பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு டிஎஸ்பி ஜவகா்லால், ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...