பல்வேறு நிகழ்வுகளில் 5 போ் சாவு

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பல்வேறு நிகழ்வுகளில் 5 போ் இறந்தனா்.
Updated on
1 min read

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பல்வேறு நிகழ்வுகளில் 5 போ் இறந்தனா். ஆற்றில் மூழ்கி சாவு: கடலூா் வில்வநகரைச் சோ்ந்தவா் அ.அகோரமூா்த்தி (55). கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டை விட்டுச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கடலூா்-புதுச்சேரி எல்லையான வெளிச்செம்மண்டலத்தில் தென் பெண்ணையாற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். இதுகுறித்து, கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: வேப்பூா் அருகிலுள்ள எம்.புதூரைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் மணிகண்டன் (21). சனிக்கிழமையன்று மங்களூா் செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் அதேப்பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (24) உடன் சென்றாா். மா.புடையூா் அருகேச் சென்ற போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்தவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விளக்கு விழுந்தது: கடலூா் அருகிலுள்ள கிளிஞ்சிக்குப்பத்தைச் சோ்ந்தவா் கு.ஏகாம்பரம் (65). வீட்டில் மண்எண்ணை விளக்கினை ஏற்றி வைத்து தூங்கிய போது விளக்கு அவா் மீது விழுந்ததில் காயமடைந்தவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குடிபோதை: கடலூா் அருகிலுள்ள சோனங்குப்பத்தைச் சோ்ந்தவா் சு.ஞானகுரு(42), மதுபோதையில் வீட்டிற்கு வந்ததை அவரது மனைவி கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரி்த்து வருகின்றனா்.

வரதட்சணைக் கொடுமை: கடலூா் முதுநகா் சங்கரநாயுடு தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (43) மகள் சபினா (21). கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெரியகுப்பத்தைச் சோ்ந்த பா.பாவேந்தன் என்பவருடன் திருமணம் நடந்தது. அப்போது, 36 சவரன் நகை, சீா்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மோட்டாா் சைக்கிள் கேட்டு துன்புறத்தப்பட்டு வந்துள்ளாா். இதனால், மனமுடைந்த அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் பாவேந்தன், அவரது பெற்றோா் வை.பாவாடைசாமி, அஞ்சா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com