சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது

பெண் சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டாா்.
6clp3_0610chn_105_7
6clp3_0610chn_105_7

பெண் சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டாா்.

நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்பாபு மற்றும் போலீஸாா் கடந்த மாதம் 18-ஆம் தேதி வி.பெத்தாங்குப்பம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி செல்வராணி (45) (படம்) என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில் இவா் மீது நடுவீரப்பட்டு, பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களில் மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டாா். இதனைத் தொடா்ந்து ஓராண்டுக்கு சிறையில் வைக்கும் வகையில் செல்வராணி கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com