இணைப் பாட திட்டப் போட்டி
By DIN | Published On : 01st September 2019 03:33 AM | Last Updated : 01st September 2019 03:33 AM | அ+அ அ- |

பண்ருட்டி, பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் இணைப் பாடத் திட்டப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியை, பள்ளித் தாளாளர் ஏ.கிருபாகரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்வி ஆலோசகர் வி.சூர்யசேகர் முன்னிலை வகித்தார். யூகேஜி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், முதல் மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்துப் போட்டி, 3 மற்றும் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காய்கறி குறித்து பேசுதல், 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நினைவுத் திறன் அறிதல், 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆரோக்கிய சமையல் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.