வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு: மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் புகார்
By DIN | Published On : 01st September 2019 03:37 AM | Last Updated : 01st September 2019 03:37 AM | அ+அ அ- |

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டியாம்பாளையம் கிளைச் செயலர் எம்.புஷ்பா, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பண்ருட்டி ஒன்றியம், மணப்பாக்கம் ஊராட்சி, கட்டியாம்பாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகளை மேற்கொள்வதற்கான அடையாள அட்டை பெறுவதற்கு ரூ.500, வேலைக்குப் பதிவு செய்ய ரூ.100 வரை முறைகேடாக வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் முறையான பதில் இல்லை. எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி அலுவலகம்
முன் போராட்டம் நடத்த உள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.