ரூ. 20 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம்

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், தச்சகாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிதாகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. 
Updated on
1 min read

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், தச்சகாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிதாகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. 
இதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.  அப்போது, கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் அசோகன், முன்னாள் துணைப் பெருந்தலைவர் ராசாங்கம், சிதம்பரம் நகரக் கழகச் செயலர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ரங்கம்மாள், கோபு, நிர்வாகிகள் கோதண்டராமன், முருகன், ராமச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானம், சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடனருந்தனர். 
முன்னதாக தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியனுக்கு தச்சகாடு கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com