லால்பேட்டையில் 60 மி.மீ மழை
By DIN | Published On : 02nd September 2019 03:28 AM | Last Updated : 02nd September 2019 03:28 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்) காட்டுமன்னார்கோவில் 53, பெலாந்துறை 28.4, ஸ்ரீமுஷ்ணம் 13.2, அண்ணாமலை நகர் 12.6, சிதம்பரம் 11.4, விருத்தாசலம் 10, குப்பநத்தம் 9.6, வடக்குத்து 6, கீழச்செருவாய் 3, குடிதாங்கி 2.5, பண்ருட்டி 2, வானமாதேவி 1.2 மில்லி மீட்டர் மழை பதிவாகின. அதே நேரம், 12 மழை அளவீட்டு நிலையங்களில் மழை பெய்யவில்லை.