சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம்
By DIN | Published On : 11th September 2019 09:10 AM | Last Updated : 11th September 2019 09:10 AM | அ+அ அ- |

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் அருகே இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது.
இந்த ஆலை மின்சார வாரியத்துக்கு மின் கட்டணம் செலுத்ததால் அதன் இணைப்பு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டதாம்.
இந்த ஆலையை நம்பி வசித்து வரும் 40 குடும்பத்தினரும் மின்சாரம் இல்லாமல் தவித்ததைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகம் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த வசதியும் கடந்த 2 நாள்களாக வழங்கப்படவில்லையாம். இதனால், ஆலை தொழிலாளர்கள் இருளில் தவித்தனர். தங்களது பாதிப்பை ஆலை நிர்வாகம், மின்சார வாரியம் தெரிந்துக் கொள்ளும் வகையில் அவர்கள் திங்கள்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...