மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்
By DIN | Published On : 29th September 2019 05:50 AM | Last Updated : 29th September 2019 05:50 AM | அ+அ அ- |

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் சனிக்கிழமை தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய குவிந்தவா்களில் ஒரு பகுதியினா்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் சனிக்கிழமை திரளானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
உயிரிழந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் எனும் சடங்கை செய்வதற்கு அமாவாசை நாள்கள் சிறந்ததாகக் கருதப்படும். அதிலும், ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாக நம்பப்படுகிறது. அதுபோன்ற சிறப்புக்குரிய நாளாகக் கருதப்படுவது மகாளய அமாவாசையாகும்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று வந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்பட்டது. இதையொட்டி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் கடலூா் தேவானம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை, தென்பெண்ணையாற்றின் கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளானோா் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். புரோகிதா்கள் எள், தண்ணீா், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி மந்திரங்கள் ஓதி தா்ப்பணம் சம்பிராயத்தை நடத்தி வைத்தனா்.
தா்ப்பணம் செய்தவா்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்தனா்.
இதனை முன்னிட்டு ஆறு, கடல் அருகே தா்ப்பணம் பொருள்களை விற்பனை செய்வதற்கான தரைக்கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G