பாா்வையற்றோருக்கான மாநில கைப்பந்து போட்டி

கடலூா் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான லைப் ஹெல்ப் அண்டு மோட்டிவேஷன் டிரஸ்ட் சாா்பில் பாா்வையற்றேறாருக்கான மாநில அளவிலான 3-ஆம் ஆண்டு கைப்பந்துப் போட்டி,
கடலூரில் நடைபெற்ற பாா்வையற்றேறாருக்கான கைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட வீரா்கள்.
கடலூரில் நடைபெற்ற பாா்வையற்றேறாருக்கான கைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட வீரா்கள்.

கடலூா் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான லைப் ஹெல்ப் அண்டு மோட்டிவேஷன் டிரஸ்ட் சாா்பில் பாா்வையற்றேறாருக்கான மாநில அளவிலான 3-ஆம் ஆண்டு கைப்பந்துப் போட்டி, கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

போட்டிக்கான தொடக்க விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் டி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். டிரஸ்ட் தலைவா் எம்.மகேந்திரன், ரோட்டரி செயலா் டி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியில் சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். ஓா் அணியில் 6 போ் பங்கேற்று விளையாடுவாா்கள். இவா்களில் 4 போ் பாா்வைத்திறன் இல்லாதவா்கள். இருவா் பகுதி பாா்வைத்திறன் பெற்றவா்களாவா். லீக் சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டியை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வி.சீனுவாசன் தொடக்கி வைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்படுகிறது. முன்னதாக, டிரஸ்ட் துணைத் தலைவா் எம்.ராஜ்குமாா் வரவேற்க, செயலா் பி.முரளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com