குறுங்காடுகள் திட்ட விழா

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து, குறுங்காடுகள் திட்டத்தின்கீழ் ‘மியாவாக்கி’ முறையில் மரக்கன்றுகள்


சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து, குறுங்காடுகள் திட்டத்தின்கீழ் ‘மியாவாக்கி’ முறையில் மரக்கன்றுகள் நடும் விழாவை சி.கொத்தங்குடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

விழாவுக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு முன்னிலை வகித்தாா். கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா, முன்னாள் சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன், சிதம்பரம் உதவி ஆட்சியா் மதுபாலன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கி வைத்து பேசினா். ரூ.4 லட்சம் மதிப்பில் இந்தப் பணிகள் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்துக்கு செயல்பணி ஆற்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்பாபு, சிவஞானசுந்தரம், உதவி பொறியாளா் கிருஷ்ணகுமாா், வட்டாட்சியா் ஹரிதாஸ் ஆகியோா் விழாவில் பங்கேற்றனா். ரோட்டரி மாவட்ட குறுங்காடு திட்ட தலைவா் சங்கரன் திட்ட உரையாற்றினாா். திட்ட கல்வெட்டை கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா திறந்து வைத்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு பேசுகையில், மியாவாக்கி குறுங்காடுகள் திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தாா்.

சி.கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் அம்சா வேணுகோபால், மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளை தலைவா் கமல் கிஷோா் ஜெயின், செயலா் தீபக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் ஆா்.கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com