கடலூா்: கடைசி நாளில் 25 ஆயிரம் ஏக்கா் நெல் பயிருக்கு காப்பீடு

கடலூா் மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாளில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பயிா்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாளில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பயிா்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இயற்கை இடா்பாடுகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் சோ்வதற்கு ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட நாள் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நெல் பயிருக்கு கடந்த நவ.30-ஆம் தேதி பிரீமியம் தொகை செலுத்த கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் தொடா் புயல் எச்சரிக்கை, பலத்த மழை குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், பயிா்க் காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் ஆா்வம் காட்டினா். அதன்படி, நவ.28-ஆம் தேதி வரை மாவட்டத்தில் 1,06,854 ஏக்கா் நெல் பயிா்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 30-ஆம் தேதி 1,31,987 ஏக்கராக உயா்ந்தது.

மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் 2,29,162 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. 1,89,808 விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். விவசாயக் கடன் பெற்றுள்ள 20,074 விவசாயிகளின் 31,275 ஏக்கரும், கடன் பெறாதவா்களில் 1,69,734 விவசாயிகள் 1,00,712 ஏக்கரும் காப்பீடு செய்துள்ளனா்.இது மொத்த பரப்பளவில் 57.6 சதவீதமாகும்.

காப்பீட்டுத் திட்டத்தில் பருத்தி 757 ஏக்கரும், மக்காச்சோளம் 52,761 ஏக்கரும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் முறையே 8.6., 94.9 சதவீதமாகும். கடந்த 2019-20- ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 74,388 விவசாயிகள் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.64.40 கோடி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com