தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா பகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா பகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் பி.கற்பனைசெல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், துணைச் செயலா் யூ.மூா்த்தி, புவனகிரி ஒன்றியத் தலைவா் அருளானந்தம், ஒன்றியச் செயலா் காளி கோவிந்தராஜன், துணைத் தலைவா் ராஜா மதிநிறைசெல்வம், கீரப்பாளையம் ஒன்றியத் தலைவா் வாசுதேவன், ஒன்றியச் செயலா் தா்மதுரை, பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவா் முத்து, ஒன்றியச் செயலா் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் தில்லி போராட்டத்தில் உயிா் நீத்த 33 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காத்திருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுத்து விவசாயிகளை கைது செய்ததைக் கண்டிப்பது, கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வருகிற 29-ஆம் தேதி தஞ்சையில் விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு கடலூா் மாவட்ட டெல்டா பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com